தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

திருமங்கலம் அருகே லாரி மீது வேன் மோதல்: இருவர் பலி

திருமங்கலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News image

திருமங்கலம் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவர் பலி

Updated On :7 ஜனவரி 2021, 11:30 am IST


திருமங்கலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

திருமங்கலத்தை அடுத்த குதிரை சாரி குளத்தைச் சேர்ந்தவர் விஜயன்(27). இவர் மதுரையிலிருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை அதிகாலை  திருமங்கலம் நோக்கி மினி வேனில் வந்து கொண்டிருந்தார் .  கீழ உரப்பனூர் பகுதியைச் சேர்ந்த கவின்(27), உசிலம்பட்டி அடுத்த நக்கல பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன்(26) ஆகிய இருவரும் வேனின் முன்பக்கம் அமர்ந்து வந்தனர். அதேசமயம் தூத்துக்குடியில் இருந்து பழனிக்கு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. லாரியை எட்டயபுரத்தை அடுத்த கீழ நம்பியார் புரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல்(24) என்பவர் ஓட்டி வந்தார். 

வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் கப்பலூர் சுற்றுச் சாலையில் வந்துகொண்டிருந்தபோது லாரி பின்பக்கம் டயர் திடீரென வெடித்தது . உடனடியாக லாரியை இடது பக்கம் திருப்ப முயன்றபோது பின்பக்கம் வேகமாக வந்த வேன் லாரி மீது மோதியது.  இதில் வேனில் பயணம் செய்த கவின், சிலம்பரசன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் டிரைவர் விஜயன் லாரி டிரைவர் வெற்றிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உயிரிழந்த கவின் மற்றும் சிலம்பரசனின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் காயமடைந்த விஜயன் மற்றும் வெற்றிவேலை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.