விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காங்கிரஸுக்கு எவ்வளவு இடம் என்பதை ஸ்டாலின் முடிவு செய்வார்: மணி ஷங்கர் ஐயர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம் என்பதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று காங்கிரஸ் தலைவர் மணி ஷங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். 

News image

காங்கிரஸ் தலைவர் மணி ஷங்கர் ஐயர்

Updated On :8 ஜனவரி 2021, 6:13 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம் என்பதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று காங்கிரஸ் தலைவர் மணி ஷங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 2021 மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் இறங்கியுள்ளன. 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், கூட்டணி, சசிகலா விடுதலை என சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடம் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மணி ஷங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். 

அதன்படி, 'சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எவ்வளவு இடங்கள் என்பதை ஸ்டாலின்தான் முடிவு செய்வார். எங்களுக்கு வழங்கப்படுவதை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்வோம். எனினும் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பேச்சுவார்த்தையில் முன்வைப்பேன். ஏனெனில் திமுக அங்கு ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. ஆனால், முன்னதாக காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் அங்கு இருந்தார். எண்ணிக்கையில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை, ஆனால், ஒரு சில இடங்களில் மாற்றம் இருக்கும்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.