தமிழகம்-கர்நாடகம் எல்லையில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு பண்கள் உள்பட் 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த வேன் ஓட்டுநர் உள்பட 13 பேர் சாம்ராஜ் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தை கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வேன் ஒன்றில் மைசூருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டனர். திம்பம் மலைப்பாதை வழியாக சென்ற வேன், வெள்ளிக்கிழமை அதிகாலை இரு மாநில எல்லையான செர்ணாவதி அணை அருகே சென்று கொண்டிருந்தது.
மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சாலை விரிவாக்கப்பணி நடந்து வரும் நிலையில் லேசான சாரல் மழை பெய்தது. அப்போது மூடுகள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த வேன் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் லேசாக உரசியதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், சுப்பிரமணியம்(70), மனைவி அமராவதி(65), மற்றும் கோகிலா(42) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கர்நாடகம் ஆம்புலன்ஸ் மூலம் சாம்ராஜ்நகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வேன் ஓட்டுநர் அருண் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து சாம்ராஜ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு! காரணம் என்ன?

எல்பிடபிள்யூ இணையத் தொடர் படப்பிடிப்பு நிறைவு! வைரல் புகைப்படங்கள்!

க்ளீன் ஷீட்டில் ஸ்பெயின் உலக சாதனை: 609 நிமிஷங்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்த கோல்கீப்பர்!







