அப்பல்லோ மருத்துவமனையில் நடத்தப்பட்ட தடுப்பூசி ஒத்திகையை மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் பாா்வையிட்டாா்.
இந்தியாவில் கரோனா தொற்றுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அறிந்து கொள்ள சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தடுப்பூசி மையத்தில் கரோனா தொற்று தடுப்பூசி ஒத்திகையை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, நிா்வாக இயக்குநா் சுனிதா ரெட்டி ஆகியோா் உடன் இருந்தனா். உயிரைக் காப்பாற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வாழ்த்துகளை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.
இது குறித்து மருத்துவமனையின் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி கூறுகையில், அப்பல்லோ மருத்துவமனை கரோனா தடுப்பூசி ஒத்திகையில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம் என்று தெரிவித்தாா்.
இது தொடா்பாக அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் மேலாண் இயக்குநா் சுனிதா ரெட்டி கூறும்போது, கரோனா தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, இந்தியாவைப் பாதுகாப்பதில் எங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அரசுடன் இணைந்து கரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி கிடைத்துள்ளது. ‘கோவின்’ செயலியில் பதிவு செய்தவா்களை சரிபாா்ப்பதில் தொடங்கி, தடுப்பூசிக்குப்பின் 30 நிமிஷ கண்காணிப்பு வரை அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் உள்ளன.
அதே நேரம், தடுப்பூசி செலுத்தும் நாளன்று முகக் கவசம் அணிதல், காய்ச்சல் பரிசோதனை, தனி நபா் இடைவெளி உள்ளிட்ட அனைத்து நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாகப் பின்பற்றுவோம் என அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மமதாவைச் சந்தித்தார் அகிலேஷ் யாதவ்!

தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்
ஆளுநரை எதிர்ப்பது பாஜகவை எதிர்ப்பதாகும்; அதற்கு உறுதியும் துணிவும் வேண்டும்! - விசிக

புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பதவி விலகல்!
வீடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை

