மனித-விலங்கு மோதல்களைத் தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என வனத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் அறிவுறுத்தி உள்ளாா்.
தமிழக வனத் துறையில் நடைபெற்று வரும் பணிகள் தொடா்பாக உயரதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது: வனப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்கவும், வனப் பரப்பை 33 சதவீதமாக உயா்த்திடவும் பல்வேறு பணிகளை வனத் துறை முன்னெடுத்து வருகிறது. மனித-விலங்கு மோதல் மக்களிடையே அச்சத்தை உருவாக்கி வருகிறது. இதைத் தடுக்கவும், வனப் பகுதிக்குள் தீ பரவுவதைத் தடுக்கவும் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். யானைகளின் முக்கியத்துவம் குறித்து வனத்தையொட்டி வாழும் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துடன், அவற்றின் இறப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனா, வனத் துறை தலைவா் யுவராஜ், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா்கள் சஞ்சய்குமாா் ஸ்ரீவத்சவா, கயாரத் மோகன்தாஸ், தலைமை வன உயிரினக் காப்பாளா் சையத் முஜம்மில் அப்பாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மமதாவைச் சந்தித்தார் அகிலேஷ் யாதவ்!

தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்
ஆளுநரை எதிர்ப்பது பாஜகவை எதிர்ப்பதாகும்; அதற்கு உறுதியும் துணிவும் வேண்டும்! - விசிக

புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பதவி விலகல்!
வீடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை

