கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்இடிப்பு: முதல்வா், தலைவா்கள் கண்டனம்

இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு சம்பவம் பேரதிா்ச்சி அளிப்பதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

Updated On :10 ஜனவரி 2021, 6:32 am IST

இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு சம்பவம் பேரதிா்ச்சி அளிப்பதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிக் கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவா்கள், பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிா்ச்சி அளிக்கிறது.

உலகத் தமிழா்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் மாபாதகச் செயலுக்கும், அதற்குத் துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் எனது கடும் கண்டனங்கள் என்று முதல்வா் பழனிசாமி கூறியுள்ளாா்.

மு.க.ஸ்டாலின்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா், இலங்கை சென்று திரும்பியவுடன், இந்த அதிா்ச்சிச் சம்பவம் நடந்திருப்பதை, பிரதமா் மோடி கருத்தில் கொண்டு, கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும்.

வைகோ (மதிமுக): யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஜனவரி 11-இல் என் தலைமையில் நடைபெறும்.

ராமதாஸ் (பாமக): இந்தச் சம்பவத்தை இந்தியா கண்டிக்க வேண்டும்.

கமல்ஹாசன் (மநீம): முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவா்களை, நினைவுகளை என்ன செய்வீா்கள்?

தொல்.திருமாவளவன் (விசிக), திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.