கோவை சிறுவாணி சாலை ஆலாந்துறை அருகே உறவினர் வீட்டிற்கு சென்று காரில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ஆலாத்துறை காமாட்சியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சீவிகுமார் (20). ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரது உறவினர் மத்துவராயபுரத்தைச் சேர்ந்த அனந்தராமன் (17) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று இரவு இருவரும் தங்களது உறவினரை விடுவதற்காக சென்னூருக்கு காரில் சென்று விட்டு, மீண்டும் ஆலந்துறை நோக்கி காரில் வந்துள்ளனர். அப்போது தண்ணீர் பந்தல் அருகே கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாரை ஓரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இதையடுத்து சாலையில் சென்றவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சாலையில் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









