அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தேநீர்

பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு தேநீர், காபி வழங்கும் நிகழ்ச்சி  லாரி உரிமையாளர்கள் சங்க வெள்ளிவிழா கட்டட வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

News image

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்ககிரி வழியாக  பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு தேநீர், பன் உள்ளிட்டவைகளை வியாழக்கிழமை வழங்கும்  அச்சங்கத்தின் பணியாளர்கள். 

Updated On :14 ஜனவரி 2021, 10:51 am IST

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சேலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சங்ககிரி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு தேநீர், காபி, பன் வழங்கும் நிகழ்ச்சி  லாரி உரிமையாளர்கள் சங்க வெள்ளிவிழா கட்டட வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
 
சேலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தை மாதம் 1-ஆம் தேதியையொட்டி  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பழனி முருகன் கோயிலுக்கு சங்ககிரி வழியாக வியாழக்கிழமை அதிகாலை முதல் பாதயாத்திரையாக சென்றனர்.  

பாதயாத்திரையாக சென்றவர்களுக்கு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வி.செல்வராஜ், செயலர் கே.கே.நடேசன், பொருளாளர் என்.மோகன்குமார், உபத்தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார், இணைச்செயலர் எம்.சின்னதம்பி, நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து சங்கத்தின் சார்பி தேநீர், நாட்டுச்சர்க்கரை தேநீர், காபி, பன் ஆகியவற்றை வழங்கினர்.  

பின்னர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவில் நடந்து செல்லும் போது பாதுகாப்பாக கோயிலுக்கு செல்ல வேண்டி ஒவ்வொருவரின் பைகளிலும் லாரிகளுக்கு ஓட்டப்படும் தரமான சிகப்பு நிற வில்லையை ஓட்டி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தினர்.

லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிட வளாகத்தில் பாதயாத்திரையாக வருபவர்கள் அமர்ந்து ஓய்வு எடுத்து செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நாற்காலிகளை வைத்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.