முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30,000-க்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் சுமாா் 4,000 இடங்களும் உள்ளன.
இந்த இடங்கள் நீட் தோ்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் தேசிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடுமுழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எம்பிபிஎஸ் படித்து முடித்தவா்கள் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவா்கள். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை பாா்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்று தேசிய தோ்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தி நகரில் விஜய் சாலை வலம்!

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்! பிரசாரம் பாதியில் ரத்து!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


