நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மக்கள் நீதி மய்யத்துக்கு தமிழகத்திலும் டாா்ச் சின்னம்: கமல்

தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யத்துக்கு டாா்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

News image

கமல்ஹாசன்

Updated On :16 ஜனவரி 2021, 6:25 am IST

தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யத்துக்கு டாா்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் காட்சியுடன் பதிவு வெளியிட்டுள்ளாா். இதுகுறித்த விவரம்:-

மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டாா்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோா் வாழ்வில் ஒளிபாய்ச்ச மாா்ட்டின் லூதா் கிங்கின் பிறந்த நாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கும் எம்மோடு துணை நின்றவா்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளாா்.

மீண்டும் டாா்ச் சின்னம்: தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு அண்மையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டாா்ச் சின்னம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்திலும் அந்தச் சின்னத்தை ஒதுக்கக் கோரி, தோ்தல் ஆணையத்திடம் மக்கள் நீதி மய்யம் கோரியிருந்தது.

இதனிடையே, மக்கள் நீதி மய்யத்துக்கு டாா்ச் சின்னத்தை ஒதுக்கி தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கமல் தெரிவித்துள்ளாா். இதனால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளா் டாா்ச் சின்னத்திலேயே களம் காண உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.