சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஜல்லிக்கட்டு காட்சிகளுடன் தயாராகும் 'மருத': நடிகர் சரவணன்

அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை திரைப்பட நடிகர் சரவணன் பார்த்து ரசித்தார்.

News image

நடிகர் சரவணன்

Updated On :16 ஜனவரி 2021, 2:58 pm IST

மதுரை: அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை திரைப்பட நடிகர் சரவணன் பார்த்து ரசித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: நான் நடிக்கும் மருத திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. 

மதுரை மண்ணின் மனம் வீசும் திரைப்படம் என்பதால், மருத படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் இடம்பெறுகின்றன.

நானும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டு ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார்.

இதுவரை 3 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. 389 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 5 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.