அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ஊத்தங்கரையில் ஸ்ரீ வீர ருத்ர சம்ப மகரிஷியின் சிலை திறப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லூர் கிராமத்தில் ஸ்ரீ வீர ருத்ர சம்ப மகிரிஷி வன்னிய குல சத்திரியர் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2021, 4:40 pm IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லூர் கிராமத்தில் ஸ்ரீ வீர ருத்ர சம்ப மகிரிஷி வன்னிய குல சத்திரியர் சிலை திறப்பு விழா மற்றும் பாமக, வன்னியர் சங்க கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளியரசு தலைமை வகித்தார்.

கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவானந்தம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் குமரேசன், கருமாண்டபதி ஊராட்சி மன்ற தலைவர் அருள், நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சீவ் காந்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜசேகரன் ,தேன்மொழி, சென்ன கிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் இளங்கோ, மாநில இளைஞரணி துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வன்னியர் குல சத்ரியர் பிறப்பு சிலையைத் திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடிகளை ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்கே. மணி, சாரதி ,நிஷாந்த், சிலம்பரசன் மற்றும் கல்லூர் இளைஞர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பாமக வன்னியர் சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.