அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூடுகிறது 

புதுச்சேரியின் சட்டப்பேரவை கூட்டம் வரும் 18ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. 

News image
Updated On :16 ஜனவரி 2021, 4:31 pm IST

புதுச்சேரியின் சட்டப்பேரவை கூட்டம் வரும் 18ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. 

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவையானது 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். தற்போது 6 மாதம் முடிவடையும் தறுவாயில் உள்ளது. இந்த நிலையில் வரும் 18ம் திங்கள்கிழமை மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் முனிசாமி வெளியிட்டுள்ளார். 

அதில் ‘‘புதுச்சேரி 14வது சட்டப்பேரவையின் 4ம் கூட்டத் தொடர் ஜனவரி 18ம் தேதி திங்கள்கிழமை காலை 10.15 மணிக்கு சிறப்புக் கூட்டத்துக்கான மறுக்கூட்டம் கூட்டப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது. 

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ள சூழ்நிலையில் இந்த சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்படுகிறது. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் நாராயணசாமியிடம் கடிதம் அளித்து, அதனை முதல்வர் ஏற்கவில்லை என தகவல் பரவியுள்ளது.

மேலும் மற்றொரு அமைச்சரும் விரைவில் பாஜகவில் சேர உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதுபோல் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் திமுகவும் காங்கிரஸ் ஆட்சி தொடர்பாக விமர்சித்து வருவதோடு, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடும் முடிவையும் எடுத்துள்ளது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவது அரசியல் நோக்கர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.