வைகை அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை அதிகாலை 69 அடியை எட்டியதை தொடர்ந்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு 3 ஆவது மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால், முல்லைப் பெரியாறு, கொட்டகுடி ஆறு மற்றும் மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தொடர் மழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது.
வைகை அணைக்கு தொடா்ந்து விநாடிக்கு 3925 கன அடி வீதம் தண்ணீா் வரத்து உள்ளது. இதனால், அணை நீா்மட்டம் சனிக்கிழமை காலை 5 மணி நிலவரப்படி, ஆணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதை தொடர்ந்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு 3 ஆவது மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையின் முழுக்கொள்ளளவான 71 அடிவரை தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை மாலை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியபோது கரையோர மக்களுக்கு முதல்வெள்ள அபாய எச்சரிக்கையும், வெள்ளிக்கிழமை இரவு அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தபோது இரண்டாம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டும் போது உபரியாக வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையின் முழுக்கொள்ளளவான 71 அடி வரையில் தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


