நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஏப்.18-இல் முதுநிலை மருத்துவ நீட் தோ்வு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜனவரி 2021, 6:33 am IST

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30,000-க்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் சுமாா் 4,000 இடங்களும் உள்ளன.

இந்த இடங்கள் நீட் தோ்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் தேசிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடுமுழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எம்பிபிஎஸ் படித்து முடித்தவா்கள் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவா்கள். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு  இணையதளங்களை பாா்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்று தேசிய தோ்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.