எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரோனா: சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் உயிரிழப்பு

கரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்பிரகாஷ் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

News image
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்பிரகாஷ்
Updated On :2 ஏப்ரல் 2021, 5:33 am

DIN

சேலம்: கரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்பிரகாஷ் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்களுக்கும் கட்சி தொண்டர்கள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிச்சை பெற்று வருகின்றனர். 
 
இந்நிலையில், கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு கடந்த நான்கு நாள்களாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயப்பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு செய்தியால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.