தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேவூர் அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து

சேவூர் அருகே அவிநாசி சாலையில் பாலத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர். 

News image

சேவூர் அருகே அவிநாசி சாலையில் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான கார்.

Updated On :3 ஏப்ரல் 2021, 7:35 am

DIN


அவிநாசி: சேவூர் அருகே அவிநாசி சாலையில் பாலத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர். 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம்((57). இவரது மனைவி ரேவதி(51). அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி(57) ஆகியோர் காரில் அவிநாசி-சேவூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். சேவூர் பந்தம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த  போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஒரத்தில் இருந்து சிறு பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், காரில் இருந்த பன்னீர் செல்வம், ரேவதி, பழனிசாமி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மூவரும் சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து குறித்து சேவூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.