இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் மட்டுமல்லாமல், அகில இந்திய அரசியலிலும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் என்பதை தமிழக வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே, பல மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்து வருவது நாடறிந்த ஒன்று. தற்போது, தேர்தல் நடைபெறவுள்ள கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரியிலும் பாஜக கூட்டணி மண்ணை கவ்வுவது உறுதியாகியுள்ளதை பல்வேறு கருத்துக் கணிப்புகளும், அரசியல் விமர்சகர்களும் அழுத்தமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.