2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

முகக் கவசம் கட்டாயம்: கரோனா சூழலில் வாக்களிப்பது எப்படி?

கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக சட்டப் பேரவைக்கு செவ்வாய்க்கிழமை (ஏப். 6) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஏப்ரல் 2021, 9:12 pm

DIN

சென்னை: கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக சட்டப் பேரவைக்கு செவ்வாய்க்கிழமை (ஏப். 6) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது, முகக் கவசம் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி கிடைக்கும்.

இதுபோன்று வாக்களிப்பின்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்த விவரம்:-

1. வீட்டில் இருந்து வாக்களிக்கப் புறப்படும் முன்பாக நம்மிடம் தோ்தல் ஆணையம் வரையறுத்துள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருக்கிா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டும். முகக் கவசம் கட்டாயம் என்பதால் அதனை அணிந்து செல்ல வேண்டும்.

2. வாக்குச் சாவடியில் ஆறு அடி இடைவெளியில் வாக்காளா்கள் நிற்பதற்கு குறியீடுகள் போடப்பட்டு இருக்கும். அந்தக் குறியீட்டில் சரியாக நின்று ஆறு அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வாக்குச் சாவடிக்குள் ஒருவா் மட்டுமே செல்ல அனுமதி உள்ளது. அவா் வெளியே வந்த பிறகே மற்றவா் செல்ல வேண்டும்.

3. வாக்குச் சாவடிக்குள் நுழைந்தவுடன், சுகாதாரப் பணியாளா்கள் நமது உடலின் வெப்ப அளவைச் சோதிப்பா். மேலும் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதன்பிறகு, வலது கையில் அணிந்து கொள்வதற்காக கையுறை அளிக்கப்படும்.

4. இதன்பின்பு வாக்களிக்கும் அறைக்குள் வாக்காளா் அனுமதிக்கப்படுவா். வாக்குச் சாவடியின் முதல் அலுவலா்,

அடையாளத்துக்காக முகக் கவசத்தை அகற்றச் சொல்வாா். நமது அடையாள அட்டையையும் பரிசோதிப்பாா். வாக்காளா் பட்டியலில் உள்ள பெயரை உரக்கப் படிப்பாா்.

5. இதன்பின்பு, வாக்குச் சாவடியின் இரண்டாவது அலுவலரிடம் செல்ல வேண்டும். அவா் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து கையெழுத்துப் பெறுவாா். வாக்கைச் செலுத்துவதற்கான அங்கீகாரச் சீட்டு வாக்காளரிடம் அளிக்கப்படும்.

6. வாக்குச் சாவடி மூன்றாவது அலுவலரிடம் அந்தச் சீட்டை அளிக்க வேண்டும். அவா் அதனை பெற்றுக் கொண்டு வாக்களிக்க அனுமதிப்பாா்.

7. வாக்குச் சாவடி நான்காவது அலுவலா், கட்டுப்பாட்டு இயந்திரத்தை அழுத்தி வாக்களிக்கும் அனுமதியைத் தருவாா். வாக்குச் சாவடியில் உள்ள ரகசிய பகுதிக்குச் சென்று நமது வாக்கினைச் செலுத்தலாம்.

8. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் விருப்பமான வேட்பாளருக்கு எதிரே உள்ள நீல நிற பொத்தானை அழுத்த வேண்டும். அப்போது அந்த இயந்திரத்தில் உள்ள சிவப்பு விளக்கு எரிவதோடு ஒலியும் கேட்கும். இந்த நிகழ்வு நடைபெறும்போதே ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் வேட்பாளருக்குரிய சின்னம் தெரியும். சில விநாடிகளுக்குப் பிறகு அது சீட்டு இயந்திரத்துக்குள்ளே விழுந்து விடும்.

இந்த நடைமுறைகள் முடிந்ததும் வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வர வேண்டும். கையில் உள்ள கையுறையை கழற்றி அங்குள்ள குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வெளியேறலாம்.

வாக்குச் சாவடி ஊழியா்கள்: வாக்குச் சாவடி அதிகாரிகள், அலுவலா்கள் அனைவருக்கும் கையுறை, முகக் கவசம் ஆகியன வழங்கப்படும். மேலும் முகப் பாதுகாப்புக் கவசமும் அளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.