அண்ணாநகர், தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர்கள் கவனிக்க..
சென்னையில் கரோனா பாதித்து வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 11,633 உயர்ந்துள்ளது.


சென்னை: சென்னையில் கரோனா பாதித்து வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 11,633 உயர்ந்துள்ளது.
சென்னையில் நாள்தோறும் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,59,320 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,43,395 ஆக உள்ளது.
தற்போது சென்னையில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, நாளொன்றுக்கு தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மையில் 1000-த்தை எட்டியது. இந்த எண்ணிக்கை மேலும் உயா்ந்து 1,500 பேருக்கு தொற்று என்ற நிலையில் உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,59,320-ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,43,395-ஆகவும் உள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,292- ஆக உள்ளது.
சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தலா 1300-ஐ எட்டியுள்ளது. வழக்கம் போல இவ்விரண்டு மண்டலங்களிலும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அப்பகுதியில் வசிப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
தொடர்ந்து, கோடம்பாக்கம் மற்றும் ராயபுரம் மண்டலங்களிலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை தலா 1,100-ஐ எட்டியுள்ளது. இதற்கடுத்த இடங்களில் தலா 900க்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் திரு.வி.க. நகர், அம்பத்தூர் மண்டலங்கள் உள்ளன.
சென்னையில், கரோனா நோயாளிகள் அதிகளவில் கண்டறியப்பட்டு வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில், கரோனா நோயாளிகள் அதிகளவில் கண்டறியப்பட்டு வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது.
மண்டல வாரியாக..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...