இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சங்கரன்கோவிலில் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கொடி அணிவகுப்பில் பங்கேற்ற எஸ்.பி. மாதவன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஜூலியஸ் சீசா், சங்கா், துணை ராணுவப் படையினா், போலீஸாா்.
Updated On :10 மார்ச் 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மாதவன் தலைமையில் பேருந்து நிலையம் முன் தொடங்கிய கொடி அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஜூலியஸ் சீசா், சங்கா், காவல்துறை துணைக் கண்காணிப்பாளா்கள் செங்கோட்டுவேலவன், காவல் ஆய்வாளா்கள் காசிராஜன், சுஜீத்ஆனந்த், செல்வம், பாலமுருகன், பாரதிராஜா, விஜி, பாண்டியம்மாள், ஆதா்ஜஸ்டின் சாமுவேல்ராஜ், வசந்தகுமாா் மற்றும் உதவி காவல் ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள் பங்கேற்றனா். இதில் மேலும் சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த துணை ராணுவப் படையினா், அதிவிரைவு அதிரடிப் படையினா், போலீஸாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பேருந்து நிலையம் தொடங்கிய கொடி அணிவகுப்பு சங்குபுரம் தெருக்கள், ரயில்வேபீடா் சாலை, பிரதானசாலை, திருவேங்கடம்சாலை, புதுமனைத் தெருக்கள், கழுகுமலை சாலை, கச்சேரி சாலை, ரதவீதிகள் வழியாக மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Story image