இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சென்னை வந்த விமானத்தில் ரூ.65.38 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை வந்த விமானத்தில் ரூ.65.38 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 11:47 am

DIN

சென்னை வந்த விமானத்தில் ரூ.65.38 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 
துபைலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படக்கூடும் என்று உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துபைலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா ஏஐ-906 என்ற விமானத்தை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். 
அப்போது விமானத்தின் கடைசி இரண்டு கழிவறைகளில் வெள்ளை நிற டேப்பால் சுற்றப்பட்ட பொட்டலம் ஒன்று இருப்பது தெரியவந்தது. 
அதைப் பிரித்துப் பார்த்த போது, 583 கிராம் எடையில் வெளிநாட்டு முத்திரைகளுடன் 10 தங்க வெட்டுத் துண்டுகளும், 870 கிராம் எடையில் தங்கப்பசை அடங்கிய 6 பொட்டலங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
மொத்தமாக ரூ. 65.38 லட்சம் மதிப்பில் 1.36 கிலோ தங்கம், கேட்பாரற்று இருந்ததாக சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.