ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

ஊத்துக்கோட்டையில் கரோனா விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் காவல்துறை மற்றும் வர்த்தக சங்கத்தினர் இணைந்து விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

News image

ஊத்துக்கோட்டையில் கரோனா விழிப்புணர்வு பேரணி

Updated On :11 ஏப்ரல் 2021, 3:21 pm IST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் காவல்துறை மற்றும் வர்த்தக சங்கத்தினர் இணைந்து கரோனா விழிப்புணர்வு பேரணியை ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தினர்.

பேரணிக்கு ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமை தாங்கினார். ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் இருந்து பேரணியாக புறப்பட்டு திருவள்ளூர் நாகலாபுரம் சாலை வழியாக ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தை அடைந்தனர்.

இதில் கரோனா குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வர்த்தக சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும் சாலையில் முகக்கவசம் இன்றி வந்த பொதுமக்களையும் இருசக்கர வாகன ஓட்டிகளையும் டிஎஸ்பி சாரதி எச்சரித்து முகக்கவசங்களை வழங்கி அனுப்பினார்.

இந்தப் பேரணியில் சுகாதாரத் துறை சார்பாக மேற்பார்வையாளர் சுப்பிரமணி மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள், காவல்துறையினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.