ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

திருமண வாழ்க்கையில் நுழைந்த பாரதி கண்ணம்மா வினுஷா!

பாரதி கண்ணம்மா நாயகி வினுஷா தேவிக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் குறித்து...

News image
Updated On :18 ஜூன் 2026, 2:28 pm IST

நடிகை வினுஷா தேவிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வினுஷா தேவி. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் வினுஷா நடித்திருந்தார்.

தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட வினுஷா, அண்மையில் நிறைவடைந்த பனி விழும் மலர் வனம் என்ற தொடரிலும் நடித்திருந்தார்.

தற்போது, வினுஷா தேவி தெலுங்கு மொழியில் பிரபலமடைந்த சின்னி என்ற தொடரின் மறு உருவாக்கமாக எடுக்கப்படும் சுற்றும் விழி சுடரே தொடரில் நடிகை வினுஷா நடித்து வருகிறார். இந்தத் தொடருக்கு சுற்றும் விழி சுடரே என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா தேவிக்கு, லிங்கேஸ்வரன் என்பவருடன் நேற்று(ஜூன் 17) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

உற்றார் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

வினுஷா தேவி - லிங்கேஷ்வரன் ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். இவர்களின் திருமண தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Actress Vinusha Devi is set to get married soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.