பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கண்ணகி கோயிலில் கொடியேற்றம் இல்லை; பக்தர்கள் ஏமாற்றம்

தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் புதன்கிழமை நடைபெற இருந்த முழுநிலவு விழாவிற்கான கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

News image
கண்ணகி கோயில் நுழைவு வாயில் (கோப்பு படம்)
Updated On :14 ஏப்ரல் 2021, 6:51 am

DIN

கம்பம்: தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் புதன்கிழமை நடைபெற இருந்த முழுநிலவு விழாவிற்கான கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக கேரளா எல்லையில் உள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று முழுநிலவு விழா கொண்டாடப்படும்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக முழுநிலவு விழா ரத்து செய்யப்பட்டது.

இந்தாண்டு குறைந்தபட்ச பக்தர்களுடன் சமூக இடைவெளியுடன் விழா நடத்துமாறு மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளையினர் தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுத்தனர்.

Story image

அதன்படி புதன்கிழமை சித்திரை முதல் நாள் லோயர்கேம்பில் உள்ள பலர் குடியில் கொடியேற்றம் நடைபெற வேண்டும். 

மாவட்ட நிர்வாகம் எந்தவித பதிலும் தராத நிலையில் லோயர் கேம்ப் பகுதியில் கண்ணகி கோயில் கொடியேற்ற விழாவிற்கு சென்ற பக்தர்கள் அங்கு யாரும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து கண்ணகி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் த.ராஜகணேசன், பி.எஸ்.எம். முருகன் ஆகியோர் கூறும்போது இரண்டாவது ஆண்டாக திருவிழா நடைபெறவில்லை, சமூக இடைவெளியுடன் தமிழக எல்லைப் பகுதி வழியாக கண்ணகி கோவிலில் வழிபாடு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் மாவட்ட நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை, தற்போது வருடத்திற்கு ஒருமுறையாவது கோயில் வளாகத்தில் உள்ள முட்புதர் செடிகொடிகள் அகறறப்பட்டு பராமரிக்கப்படும். ஆனால் அதற்கான நடவடிக்கையையும் தேனி மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை.

இதனால் மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழக உரிமை பறிபோகும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.