கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கதால் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டதையடுத்து மேடை நிகழ்ச்சிகளின்றி தங்களது வாழ்வாதாரத்தை கடன் வாங்கி சமாளித்து வந்த நாடக கலைஞர்களுக்கு, நிகழாண்டும் திருவிழாக்களுக்குத் தடை ஏற்பட்டுள்ளதால், வாங்கியுள்ள கடன்களையே திரும்பச் செலுத்த முடியாத நிலையில், எதிர்வரும் வருட நாள்களில் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது எனவும், தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சினிமா மற்றும் சின்னதிரை கலைஞர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் போல தங்களுக்கும் சில கட்டுப்பாடுகளுடன் மேடை நாடகங்களை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், அல்லது மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கி உதவிட வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட அனைத்து நாட்டுப்புற மற்றும் மேடை நாடக கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைத்து கலைஞர்கள் தங்களது மனுவை நேரில் வட்டாட்சியரகத்திற்கு சென்று வருவாய் வட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான எம்.லஜபதிராஜிடம் அளித்தனர்.