விவேக் முழுமையாக நலம்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்
'சின்னக் கலைவாணர்' விவேக் முழுமையாக நலம்பெறப் வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கோப்புப் படம்.

கோப்புப் படம்.
'சின்னக் கலைவாணர்' விவேக் முழுமையாக நலம்பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகரான விவேக், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விவேக்குக்குத் தற்போது எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விவேக்கின் இதயச் செயல்பாட்டை சீர்செய்ய எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய எக்மோ சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் 'சின்னக் கலைவாணர்' விவேக் முழுமையாக நலம்பெறப் வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்' நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன்.
அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...