கண்காணிப்பு கேமரா செயலிழப்பு சந்தேகத்தை எழுப்புகிறது: கமல்
வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை கமல்ஹாசன் நேரில் சென்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை பாதுகாக்க வேண்டும்.
வாக்கு இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே மர்மமான முறையில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் லேப்டாப் உடன் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது
வாக்கு எண்ணும் மையத்திற்குள் திடீரென கன்டெய்னர் லாரிகள் வருகின்றன. இதனால் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் மீது சந்தேகம் எழுகிறது'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...