2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்: சத்யபிரத சாகு

மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News image
மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்: சத்யபிரத சாகு
Updated On :23 ஏப்ரல் 2021, 7:49 am

DIN


சென்னை: மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை முன்கூட்டியே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று வாக்கு எண்ணிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரத சாகு, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். பிறகு, 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவது தொடங்கும்.

வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கரோனா சோதனை செய்து கொண்ட சான்று அவசியமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.