மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடி அருகே வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் கைது

தூத்துக்குடி அருகே வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image

வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மணிகண்டன், நண்பர்களுடன்.

Updated On :25 ஏப்ரல் 2021, 3:57 am

DIN

தூத்துக்குடி அருகே வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மறவன்மடம் திரவியபுரம் ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயம் அருகில் அதே பகுதியைச்  சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் மணிகண்டன் தனது 19வது பிறந்தநாளை கடந்த 22-ந்தேதி அன்று நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது, பிறந்தநாள் கேக்கை நீண்ட வாளால் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனை வீடியோ மற்றும் போட்டோவாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இது தூத்துக்குடி மாவட்டத்தில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டோரை கைது செய்ய உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மீனா, வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டிய மணிகண்டனை கைது செய்தனர். மேலும் கேக் வெட்ட பயன்படுத்தப்பட்ட வாளையும் பறிமுதல் செய்தனர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராஜா (24), ஜெயகணேஷ்(21), அதிர்ஷடலிங்கம் (27), யுவராஜா (24) ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும், சாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை ஆடியோ மற்றும் விடியோக்களை இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்புவோர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.