மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முழு முடக்கத்தால் முடங்கியது திருச்சி!

தமிழக அரசின் உத்தரவுப்படி அமல்படுத்தப்பட்ட முழு முடக்கத்தால் திருச்சி மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முற்றிலும் முடங்கியுள்ளது.

News image

திருச்சியில் வெறிச்சோடிய சாலைகள்

Updated On :25 ஏப்ரல் 2021, 4:39 am

DIN

திருச்சி: தமிழக அரசின் உத்தரவுப்படி அமல்படுத்தப்பட்ட முழு முடக்கத்தால் திருச்சி மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முற்றிலும் முடங்கியுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Story image

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்த உத்தரவு அமலாகியுள்ளது.

Story image

இதன் கராணாக திருச்சி மாநகரம், உறையூர், திருவானைக்கா, சமயபுரம், திருவரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், உப்பிலியபுரம், முசிறி, துறையூர், தா.பேட்டை, மருங்காபுரி என மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக கடைகள் திறக்கப்படவில்லை.

Story image

பெட்ரோல் விற்பனை நிலையங்களும் இயங்கவில்லை. மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. பேருந்து, ரயில், ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.

Story image

வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்:

மாநகரின் அடையாளமான மலைக்கோட்டை, காவிரி பாலம், கொள்ளிடம் பாலம் மற்றும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் நடமாட்டமும் இல்லை. ஒரு சில இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்வதை காண முடிந்தது.

Story image

தேநீரகங்கள் மற்றும் உணவகங்களும் திறக்கப்படவில்லை. அம்மா உணவகங்கள் மட்டுமே வழக்கம்போல இயங்கின. திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரையில் இந்த முழு முடக்கம் அமலில் உள்ளது. 

திருச்சி திருவானைக்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் எளிமையாகவும் ஆட்கள் குறைவாக திருமணம் நடைபெற்றது.

திருச்சி திருவானைக்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் எளிமையாகவும் ஆட்கள் குறைவாக திருமணம் நடைபெற்றது.

முழு முடக்கத்தால் முன்னதாக திட்டமிடப்பட்ட திருமணங்கள் எளிமையாக நடைபெற்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.