நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈரோடு: போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி 

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய இரு தடுப்பூசிகள் முன் களப்பணியாளர்கள், மட்டும் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கூறப்படுகிறது. 

News image

போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி 

Updated On :27 ஏப்ரல் 2021, 9:29 am

DIN

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய இரு தடுப்பூசிகள் முன் களப்பணியாளர்கள், மட்டும் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கூறப்படுகிறது. 

ஈரோடு மாவட்டத்திலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கும், 1.18 லட்சம் மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி ஈரோடு மண்டலத்துக்கு உட்பட்ட போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த சில நாள்களாக தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மண்டலத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 2452 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் நேற்று வரை 1050 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இதையடுத்து கோபி மற்றும் ஈரோடு -1 கிளைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் 112 ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமினை ஈரோடு மண்டல பொது மேலாளர் கணபதி தொடங்கி வைத்தார். கிளை மேலாளர்கள் அர்ஜுனன், நல்லசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (போக்குவரத்து) புவியரசு மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.