2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தேர்தலை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
தேர்தலை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்
Updated On :27 ஏப்ரல் 2021, 9:27 am

DIN

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதால், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது, சட்டமன்ற தேர்தல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், தமிழகத்தில் 6 மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில்  விவிடி சிக்னல் அருகே புதிய தமிழகம் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் விகே அய்யர் தலைமை வகித்தார். மாவட்ட செயலர்கள் கனகராஜ், மன்சூர் அலி, செல்லத்துரை, நகர செயலாளர் ரமேஷ் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.