

சென்னை: நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்கள், பருவத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன.
மே 10ஆம் தேதி நடைபெற வேண்டிய இறுதிப் பருவத் தேர்வுகளை ஐஐடி சென்னை ஒத்திவைத்துள்ளது. பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்தல் நடைபெறும் தேதி கரோனா பெருந்தொற்றுப் பரவல் குறைந்த பிறகு, அறிவிக்கப்படும் என்றும் ஐஐடி சென்னை அறிவித்துள்ளது.
மே 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெற வேண்டிய பருவத்தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
மேலும், சென்னை பல்கலைக்கழகமும் தனது ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மே 17 முதல் பருவத் தேர்வுகளை நடத்த சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டிருந்த நிலையில், அதனை ரத்து செய்து வேறொரு நாளில் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.