அதே வேளையில், தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதன்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதி முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் இருக்கிறது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்து நாளை அறிவிக்க அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்துள்ளது.