சென்னையில் 31,308 கரோனா நோயாளிகள்; 60% பேர் ஆண்கள்
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 31,308 ஆக உள்ளது.


சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 31,308 ஆக உள்ளது.
ஒட்டுமொத்தமாக கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 59.39 சதவீதம் பேர் ஆண்கள். 40.61 சதவீதம் பேர் பெண்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தலா 3 ஆயிரத்தைத் தாண்டியது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,28,520 ஆக உள்ளது. இவர்களில் 2,92,511 பேர் குணமடைந்துவிட்டனர். 4,701 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர். 31,308 பேர் சிகிக்கையிலிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த பாதிப்பில் 10 சதவீதமாகும்.
மொத்தமாக 15 மண்டலங்களில், இராயபுரம், திருவிகநகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில்தான் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.
மிகக் குறைந்த அளவாக மணலியில் 182 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மண்டல வாரியாக நிலவரம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...