கருத்துக் கணிப்புகள் அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுபவை: சீமான்
கருத்துக் கணிப்புகள் அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுபவை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


கருத்துக் கணிப்புகள் அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுபவை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் கருத்துத் திணிப்புகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்த தேவையில்லை. இதுபோன்ற கருத்துத் திணிப்புகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் உளவியலை சிதைப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுபவை. கடந்த காலத்தில் கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் வெளியான எவையும் சரியானவையாக இருந்ததில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு.
எனவே இது போன்ற எதிர்மறைச் செய்திகளை, புறக்கணித்துவிட்டு நம்பிக்கைகளோடு வாக்கு எண்ணிக்கை நிகழ்விற்கு நாம் தயாராவோம். நாளை மறுநாள் (02.05.2021 ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு குறித்த நேரத்திற்குச் சென்று, நோய்த் தொற்றுக் கால விதிகளைக் கடைபிடித்து வாக்கு எண்ணிக்கை நிகழ்வினை இராணுவ ஒழுங்கோடு நமது உறவுகள் நிகழ்த்திட வேண்டுமென இந்தச் சமயத்தில் வலியுறுத்துகிறேன்.
நமது கடும் உழைப்பு எந்த அளவிற்கு சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பதனைக் கண்டிட, முதல் வாக்கு எண்ணும் நொடியில் இருந்து இறுதி வாக்கு எண்ணும் நொடி வரை இருந்திட வேண்டும் என உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
கடுமையான நோய்த்தொற்று காலமான இக்காலகட்டத்தில் தனிநபர் இடைவெளியை பின்பற்றி, முழுமையாக மூக்கு-வாய் பகுதிகளை மறைக்கின்ற முகக் கவசங்கள் அணிந்து, கிருமி போக்கிகளைப் பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கை மையங்களில் நாம் தமிழர் உறவுகள் மிகுந்த கவனத்தோடு செயல்படும்படி கோருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...