கட்சித் தலைவர்களுக்கு உயர் நீதிமன்றம் அளித்த முக்கிய அறிவுரை

தமிழகத்தில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஊர்வலம் செல்லவும், பட்டாசு வெடிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கட்சித் தலைவர்களுக்கு உயர் நீதிமன்றம் அளித்த முக்கிய அறிவுரை (கோப்பிலிருந்து)
கட்சித் தலைவர்களுக்கு உயர் நீதிமன்றம் அளித்த முக்கிய அறிவுரை (கோப்பிலிருந்து)
Published on
Updated on
1 min read


சென்னை: தமிழகத்தில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஊர்வலம் செல்லவும், பட்டாசு வெடிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையின்போது வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசியல் கட்சியிருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும்,கட்சித் தலைவர்கள் தங்களது தொண்டர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களான பட்டாசு வெடிப்பது, ஊர்வலமாகச் செல்வது போன்றவற்றை செய்யக் கூடாது.

கரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னுதாரனமாக திகழ வேண்டும்.  தங்களது தொண்டர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கப்படவில்லை. ஊர்வலங்கள் செல்லவில்லை என்பதை அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com