கும்மிடிப்பூண்டியில் வியாபாரிகளுடன் சுகாதார துறையினர் கரோனா தடுப்பு குறித்து ஆலோசனை

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கரோனா தொற்று 3ஆம் அலையை தடுக்கும் நோக்கில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தாரும், சுகாதார துறையினரும் கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தினர்
வியாபாரிகள் சங்கத்தினரிடம்  கரோன தொற்று மூன்றாவது அலை குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்த கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ்.
வியாபாரிகள் சங்கத்தினரிடம்  கரோன தொற்று மூன்றாவது அலை குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்த கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கரோனா தொற்று 3ஆம் அலையை தடுக்கும் நோக்கில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தாரும், சுகாதார துறையினரும் கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா தலைமை தாங்கினார். பேரூராட்சி அலுவல பதிவறை எழுத்தர் ரவி, தூய்மை பணி  மேற்பார்வையாளர் குமார் முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் பங்கேற்று வியாபாரிகள் சங்கத்தினரிடம்  கரோன தொற்று மூன்றாவது அலை குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

அப்போது கடைகளில் பணிபுரிபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், பணி நேரங்களில் முககவசம் கட்டாயம் அவசியம் என்றும், அடிக்கடி கைகளை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும் என்றவர் கரோனா தொற்றின் இரண்டாவது அலையை தடுத்து நிறுத்தியது போல மூன்றாவது அலை தலைதூக்காமல் பார்த்துக் கொள்ள அரசின் நடவடிக்கைக்கு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

நிகழ்வில் பேசிய வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், கடைகளுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அதற்கு கடை உரிமையாளர்கள் பொறுப்பேற்க முடியாது. கடந்த காலங்களில் கடைக்கு வருபவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் சுகாதார துறையினர், பேரூராட்சி நிர்வாகத்தார் கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்ததாகவும், இனி வரும் காலங்களில் கடைக்கு வருபவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கலாம், கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்க கூடாது என்றனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி நகரில் முகக்கவசம் இல்லாமல் கடைவீதிகளில் திரிபவர்களுக்கும், கடைகளில் முகக்கவசம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். தொழிற்சாலைகளில் கரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com