மக்களைத் தேடி மருத்துவம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கான வாகனங்களை வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கான வாகனங்களை வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.


கோவை: கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் தோற்றா நோயாளிகளுக்கு வீடு தேடி மருந்துகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவ என்ற திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோவை, சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 7 மவட்டங்களில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். 

முதலாவதாக கோவையில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

கோவையில், நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கான வாகனங்களை வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, சுகாதாரத் துறை துணை இயக்குநர் எஸ்.செந்தில்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் ராஜா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகள் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com