/

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு கோரிக்கை

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து இடஒதுக்கீடுகளிலும் சமநீதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு கோரியுள்ளது.

News image
தமிழக அரசு
Updated On :28 ஜனவரி 2024, 3:50 am

DIN

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து இடஒதுக்கீடுகளிலும் சமநீதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் முதன்மைபெற அரசு பள்ளிகளுக்கு இணையாக அரசு உதவிபெறும் பள்ளிகளும் சமபங்காற்றி வந்துள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில்  7.5% மருத்துவ மாணவர் இட ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உரிய பங்களிப்பை வழங்கிடக்  கேட்டபோது அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளே என்று அன்றைய முதல்வர் தெரிவித்திருந்தார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவது என அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவை வரவேற்றுள்ள தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார்பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு தமிழக அரசு வழங்குகின்ற மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து இட ஒதுக்கீடுகளிலும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உரிய பங்களிப்பை அளித்து சமநீதி வழங்கிட வேண்டும் என கோரியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.