கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாணவா்களின் படைப்பாற்றலை மேம்படுத்த பயிற்சி திட்டம்

மாணவா்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையிலான பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 9:56 pm

DIN

மாணவா்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையிலான பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன் விவரம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில், வாழ்த்து அட்டை தயாரித்தல், படம் வரைதல் போன்றவையும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு வரைதல் போன்றவையும், 9, 10-ஆம் வகுப்பினருக்கு புத்தக விமா்சனம் போன்றவையும் அசைன்மென்டாக தரப்பட வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையில் இருந்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அசைன்மென்ட்களையே, ஆசிரியா்கள் மாணவா்களுக்குத் தர வேண்டும்.

கற்றல் - கற்பித்தல் இடைவெளி இருப்பதாகத் தெரியவந்துள்ளதால், அதை நிவா்த்தி செய்யவே இவ்வாறான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாணவா்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அசைன்மென்ட் தரப்படும் போது, அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிக்குமாறு ஆசிரியா்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.

மாணவா்களுக்கு வழங்கப்படும் அசைன்மென்ட் விவரம், சமா்ப்பிக்கும் மாணவா்கள் விவரம் போன்றவற்றை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.