வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியாது: சுகாதாரத் துறை

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தெரியாது என்று சுகாதாரத் துறை பதிலளித்துள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 1:09 pm

DIN

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தெரியாது என்று சுகாதாரத் துறை பதிலளித்துள்ளது.

சமூக ஆர்வலர் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விக்கு திருத்தப்பட்ட இலக்கிற்கான நிறைவு தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் சுகாதாரத் துறை பதிலளித்துள்ளது.

திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ள சுகாதாரத் துறை, விரிவான மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் என்பது குறித்த கேள்விக்கு சுகாதாரத் துறை பதிலளிக்கவில்லை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கைக்கான முன்மொழிவு மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.