விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சென்னையில் குறையும் கரோனா: கோவை மீண்டும் முதலிடம்

சென்னையில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

News image
சென்னையில் குறையும் கரோனா: கோவை மீண்டும் முதலிடம்
Updated On :16 ஆகஸ்ட் 2021, 2:40 pm

DIN

சென்னையில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 205 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சென்னையில் கரோனா பாதிப்பு 216-ஆக இருந்தது. கடந்த மாதம் 27-ம் தேதி 139-ஆக இருந்த நிலையில், தற்போது 205-ஆக பதிவாகியுள்ளது.

சென்னையில் புதிதாக 235 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4 பேர் உயிரிழந்தனர். 

பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 2,080 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் இதுவரை மொத்தமாக 5,41,402 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.8 சதவிகிதமாக உள்ளது.

சென்னையை விட கோவையில் 217 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஈரோடு 170 பேருக்கும், தஞ்சாவூரில் 127 பேருக்கும், சேலத்தில் 123 பேருக்கும், செங்கல்பட்டில் 112 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.