தமிழகத்தில் புதிதாக 1,851 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,851 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


தமிழகத்தில் புதிதாக 1,851 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் திங்கள்கிழமை மட்டும் 1,54,631 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,851 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் குறையும் கரோனா: கோவை மீண்டும் முதலிடம்
மேலும் 1,911 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 28 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,90,632 ஆக உயர்ந்துள்ளது. இதில் 25,35,715 பேர் குணமடைந்துவிட்டனர். 34,547 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 20,370 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:
கோவை - 217
சென்னை - 205
ஈரோடு - 170
தஞ்சாவூர் - 127
சேலம் - 123
செங்கல்பட்டு - 112
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...