மண்டைக்கு மேலே இருக்கும் கொண்டையை மறக்க வேண்டாம்: காவல்துறை

மண்டைக்கு மேலே இருக்கும் கொண்டையை மறந்துட்டேனே என்ற வசனமும் பலராலும் பல சமயங்களில் பகிரப்படுவது வழக்கம்.
மண்டைக்கு மேலே இருக்கும் கொண்டையை மறக்க வேண்டாம்: காவல்துறை
மண்டைக்கு மேலே இருக்கும் கொண்டையை மறக்க வேண்டாம்: காவல்துறை
Updated on
1 min read


போக்கிரி படத்தில் வரும் பாடி சோடா கதாப்பாத்திரத்தை பலராலும் மறக்க முடியாது. ஃபாலோ பண்றீயா டா பாடி சோடா என்பதையும், மண்டைக்கு மேலே இருக்கும் கொண்டையை மறந்துட்டேனே என்ற வசனமும் பலராலும் பல சமயங்களில் பகிரப்படுவது வழக்கம்.

இதெல்லாம் எதற்காக இங்கே சொல்கிறோம் தெரியுமா? இருக்கிறது. மக்களின் நன்மை கருதி, பல்வேறு இணைய திருடர்கள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை இன்று ஒரு எச்சரிக்கை மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

அதில், இணைய திருடர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். ஏடிஎம் 16 இலக்க எண் மோசடி, யுபிஐ மோசடி, சமூக வலைத்தளங்கள் மூலமாக ஏமாற்றுவது போல எத்தனையோ மோசடியாளர்கள் இருக்கிறார்கள். 

ஆனால், அவர்களின் குறிக்கோள் ஒன்றே. ஏதாவது ஒரு வழியில் நம்மிடம் இருந்து பணத்தை பறித்துக் கொள்வது மட்டும்தான்.

எனவே, மக்கள் எப்போதும் ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். மோசடியாளர்களிடம் சிக்கக் கூடாது. மோசடியாளர்கள் எந்த வகையில் உங்களைத் தொடர்பு கொண்டாலும் அவர்களிடம் நீங்கள் சொல்ல வேண்டியது நீ எந்த வழியில் வந்து ஆட்டைய போட நினைச்சாலும் மாட்ட மாட்டோம் டா பாடி சோடா. ஏன்னா. காவல்துறையினர் எங்களுக்கு ஏற்கனவே விழிப்புணர்வு கொடுத்துட்டு இருக்காங்க என்று கன்னத்தில் அறைந்தது போல சொல்ல வேண்டும்  என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சைபர் பிரிவு காவல்துறையினருக்கு புகார் அளிப்பது தொடர்பாகவும் ஒரு விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com