இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சென்னையில் 26ஆம் தேதி 400 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைப் பரவலாக்கும் முயற்சியாக சென்னையில் 400 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

News image
சென்னையில் 26ஆம் தேதி 400 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
Updated On :24 ஆகஸ்ட் 2021, 12:49 pm

DIN

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைப் பரவலாக்கும் முயற்சியாக சென்னையில் 400 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கரோனா மூன்றாம் அலை முன்னெச்சரிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் வார்டுக்கு 2 தடுப்பூசி முகாம்கள் வீதம் 400 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ள மாநகராட்சி இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.