நதியில் வெள்ளம்.. கரையில் நெருப்பு: ஓபிஎஸ் மேற்கோள்காட்டிய பாடல் வரிகள்

மத்திய அரசு கொண்டு வந்த மூன்றுவேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
நதியில் வெள்ளம்.. கரையில் நெருப்பு: ஓபிஎஸ் மேற்கோள்காட்டிய பாடல் வரிகள்
நதியில் வெள்ளம்.. கரையில் நெருப்பு: ஓபிஎஸ் மேற்கோள்காட்டிய பாடல் வரிகள்

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்த மூன்றுவேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதும், அதனை எதிர்த்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம், வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்க்கும் விவகாரத்தில், நதியில் வெள்ளம், கரையில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு இதுவே என் நிலை என்று தீர்மானத்தை தன்னால் ஆதரிக்கவோ, எதிர்க்கவோ முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட சிவாஜி கணேசன் நடித்த தேனும் பாலும் என்ற படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பாடல்வரிகளை மேற்கோள்காட்டினார்.

மேலும், மூன்று வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் எனது நிலை என்ன என்பது அவை முன்னவருக்குத் தெரியும் என்று கூறியதால், அவையில் சிரிப்பலை எழுந்தது.

வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்று துரைமுருகன், ஓ. பன்னீர்செல்வத்தைக் கேட்ட போது, வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், அது தொடர்பாக தீர்ப்பு வெளிவந்த பிறகே பேச முடியும் என்று பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com