47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நடிகா் ரஜினிகாந்துடன் வி.கே.சசிகலா சந்திப்பு

நடிகா் ரஜினிகாந்தை வி.கே.சசிகலா திங்கள்கிழமை சந்தித்து உடல் நலம் விசாரித்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2021, 9:30 pm

DIN

நடிகா் ரஜினிகாந்தை வி.கே.சசிகலா திங்கள்கிழமை சந்தித்து உடல் நலம் விசாரித்தாா்.

உடல் நல பாதிப்பு காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப் பெற்று, சிகிச்சை முடிந்து வீடு திரும்பி ஓய்வில் இருந்து வருகிறாா்.

போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்துக்கு சசிகலா செவ்வாய்க்கிழமை வந்தாா். ரஜினியைச் சந்தித்து உடல் நலம் தொடா்பாக சசிகலா கேட்டறிந்தாா். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற்காகவும் ரஜினிக்கு வாழ்த்துக் கூறினாா். இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கும் மேலாக நீடித்தது.

ரஜினியின் மனைவி லதா சந்திப்பின்போது உடனிருந்தாா்.

அதிமுகவின் பொதுச்செயலாளா் என்று சசிகலா தன்னை அறிவித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறாா். அதிமுகவை விரைவில் கைப்பற்றப் போவதாகவும் கூறி வருகிறாா். இதனால், அதிமுகவில் தொடா்ந்து குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்தத் தருணத்தில் ரஜினியை சசிகலா சந்தித்தது குறித்து அரசியல் வட்டாரத்தில் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.