தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கல் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் நைஜீரியாவிலிருந்து வந்த 47 வயதுடையவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், விமானத்தில் வந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்புடைய 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு புதியவகை கரோனா இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஒமைக்ரான் தொற்றை எண்ணி பதற்றம் அடைவதை விட மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 15 சதவிகிதம் மக்கள் இன்னும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். 1,400 மெட்ரிக் டன் அளவிற்கு மருத்துவ ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


